தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை 2024 பட்டியலை ஆகஸ்ட் 12 அன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ் (ஐஐடி எம்) தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றதால், நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனமாக அதன் ஆதிக்கத்தை தொடர்ந்தது.
ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பொறியியலில் முதல் இடத்தைப் பிடித்தது. மற்றும் நாட்டின் இரண்டாவது சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக மதிப்பிடப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பிரிவில் முதல் இடத்தை வெறும் 2.2 மதிப்பெண்களால் தவறவிட்டது.
ஒட்டுமொத்த பிரிவில், 2023 ஆம் ஆண்டின் ‘ஒட்டுமொத்த’ பிரிவில் மூன்றாவது முதல் பத்தாவது இடங்களை ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, ஐஐடி கான்பூர், எய்ம்ஸ் டெல்லி, ஐஐடி காரக்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி குவஹாத்தி மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) பெற்றன.
ஆங்கிலத்தில் வாசிக்க
பொறியியல் பிரிவைப் போலவே, மருத்துவப் பிரிவிலும் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்றது. டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றது.
எய்ம்ஸ் டெல்லியைத் தொடர்ந்து சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மற்றும் பெங்களூரின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆகியவை முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டன.
2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசை 13 பிரிவுகளில் 5,543 உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“