/indian-express-tamil/media/media_files/2025/09/06/whatsapp-image-2025-09-06-18-21-27.jpeg)
Coimbatore PSGR Krishnammal College for Women
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளின் செயல்திறன் மற்றும் உள்கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு (NIRF) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கோயம்புத்தூரில் உள்ள தனியார் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, இந்திய அளவில் 9-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பிரிவில் இந்தச் சிறப்பான இடத்தை இக்கல்லூரி பெற்றுள்ள நிலையில், இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/06/whatsapp-image-2025-2025-09-06-18-22-12.jpeg)
இந்தச் சந்திப்பில் கல்லூரியின் சேர் பர்சன் நந்தினி மற்றும் கல்லூரி முதல்வர் ஹாரத்தி ஆகியோர் பேசினர். இது தங்களுக்குப் பெருமைமிகு தருணம் என்றும், கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து உழைத்ததன் பலன் இது என்றும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன்னேறியுள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக முதல் 10 இடங்களுக்குள் கல்லூரி இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
கல்லூரியின் பாடத்திட்டங்களும் இந்த வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். அனைத்துப் பாடத்திட்டங்களும் தொழில்துறையுடன் இணைந்திருப்பதால், மாணவிகளின் கல்விக்கு அது பேருதவியாக இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், பெண்களின் மேம்பாடு (Empowerment) தங்களுக்கு மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தனர். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்திருப்பதால், தங்கள் மாணவிகள் அங்கும் சென்று கல்வி பற்றி அறிந்துகொள்ள முடிவதாகவும் அவர்கள் கூறினர்.
இந்தச் சந்திப்பின்போது, கல்லூரி இயக்குநர் கலைச்செல்வன், ஜி.ஆர்.ஜி. சதாசிவம், என்.ஐ.ஆர்.எஃப் ஒருங்கிணைப்பாளர் ராஜராஜேஸ்வரி, செயலாளர் யசோதா தேவி, டீன் வசந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us