/indian-express-tamil/media/media_files/2025/09/04/iit-madras-2025-09-04-12-35-00.jpg)
என்.ஐ.ஆர்.எஃப். பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் கண்டெண்ட் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.
டெல்லியில், கல்வி அமைச்சகம் இன்று, பொறியியல் நிறுவனங்களுக்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 தரவரிசைகளை வெளியிட்டது. இது இந்த வருடாந்திர பயிற்சியின் 10-வது பதிப்பாகும். தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்த, இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras), பொறியியல் பிரிவில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
2015-ல் தொடங்கப்பட்ட என்.ஐ.ஆர்.எப். உயர்கல்வி நிறுவனங்களை பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாடு போன்ற பல பிரிவுகளில் மதிப்பீடு செய்கிறது. கடந்த ஆண்டு, மாநில மற்றும் திறந்தவெளி பல்கலைக் கழகங்கள் போன்ற புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.