NIRF Ranking 2025: இன்று அறிவித்த தேசிய தரவரிசையில் கோவைக்கு பெருமை; டாப் 10-ல் இடம் பிடித்த 2 கல்லூரிகள்

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025-இன் தலைசிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 9-வது இடத்திலும், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10-வது இடத்திலும் உள்ளன.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025-இன் தலைசிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 9-வது இடத்திலும், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10-வது இடத்திலும் உள்ளன.

author-image
WebDesk
New Update
NIRF Ranking 2025

NIRF Ranking 2025: இன்று அறிவித்த தேசிய தரவரிசையில் கோவைக்கு பெருமை; டாப் 10-ல் இடம் பிடித்த 2 கல்லூரிகள்

NIRF Ranking 2025 Top Colleges Of Tamil Nadu: மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025-ஆம் ஆண்டிற்கான நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தப் பிரிவு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தரவரிசைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், டெல்லியில் உள்ள இந்து கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. மேலும், இந்த முதல் 10 இடங்களில் தமிழ்நாட்டில் உள்ள 2 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள்:

1. இந்து கல்லூரி, டெல்லி

2. மிராண்டா ஹவுஸ், டெல்லி

3. ஹான்ஸ்ராஜ் கல்லூரி, டெல்லி

4. கிரோரி மால் கல்லூரி, டெல்லி

5. செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி, டெல்லி

6. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கொல்கத்தா

7. ஆத்மா ராம் சனாதன் தர்ம் கல்லூரி, புதுடெல்லி

8. செயின்ட் சேவியர் கல்லூரி, கொல்கத்தா

9. பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர்

10. பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

NIRF Ranking

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி (PSGR Krishnammal College), தென்னிந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 1963-ல் பத்மஸ்ரீ டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், 2004-ம் ஆண்டு முதல் தன்னாட்சி (Autonomous) அதிகாரம் பெற்று தனித்துவத்துடன் செயல்படுகிறது.

Advertisment
Advertisements

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) ஏழு முறை மறுமதிப்பீடு செய்யப்பட்டு, உயரிய தரமான 'ஏ++' (A++) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அறிவியல், கலை, வர்த்தகம், கணினி அறிவியல் மற்றும் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வழங்குகிறது. மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில், பல தொழில்சார் படிப்புகளையும், சான்றிதழ் படிப்புகளையும் வழங்குகிறது. மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பின் (NIRF) 2024-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் கல்லூரிகளில் 7-வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் (PSG College of Arts & Science), தென்னிந்தியாவின் பழமையான மற்றும் உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், 1978-ம் ஆண்டு முதல் இந்த கல்லூரி தன்னாட்சி (Autonomous) அதிகாரம் பெற்று தனித்துவத்துடன் செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்தியாவின் முதல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) ஏழு முறை மறுமதிப்பீடு செய்யப்பட்டு, உயரிய தரமான 'ஏ++' (A++) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை கட்டமைப்பின் (NIRF) 2023-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் கல்லூரிகளில் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது. அறிவியல், கலை, வணிகவியல், மேலாண்மை, மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில், 41 இளங்கலை மற்றும் 29 முதுகலை படிப்புகளை இந்தக் கல்லூரி வழங்குகிறது. மேலும், பல ஆராய்ச்சிப் படிப்புகளையும் இங்கு படிக்கலாம். மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், அதிநவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் நூலகம், கம்ப்யூட்டர் மையங்கள் மற்றும் விளையாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: