NIRF 2025: டாப் 100 இடங்களில் 14 தமிழக பொறியியல் கல்லூரிகள்; முழு லிஸ்ட் இங்கே

NIRF 2025: என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை வெளியீடு; தமிழ்நாட்டின் டாப் 14 பொறியியல் கல்லூரிகள் இவைதான்; முதல் 100 இடங்களில் இடம்பெற்ற கல்லூரிகளின் விபரம் இங்கே

NIRF 2025: என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை வெளியீடு; தமிழ்நாட்டின் டாப் 14 பொறியியல் கல்லூரிகள் இவைதான்; முதல் 100 இடங்களில் இடம்பெற்ற கல்லூரிகளின் விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
best engineering colleges

மத்திய அரசின் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) 2025 ஆம் ஆண்டிற்கான நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தப் பிரிவு, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தரவரிசைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisment

அந்த வகையில் பொறியியல் நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த நிறுவனங்களின் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை நிலை, மதிப்பெண்கள் ஆகியவற்றை வரிசையாக பார்ப்போம்.

1-ம் இடம்: இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐ.ஐ.டி சென்னை) - 88.72 

9-ம் இடம்: தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (என்.ஐ.டி திருச்சி) - 68.14 

Advertisment
Advertisements

14-ம் இடம்: எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை - 65.83

16-ம் இடம்: வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், (வி.ஐ.டி வேலூர்) – 65.25

20-ம் இடம்: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 63.51

23-ம் இடம்: அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர் - 62.46 

33-ம் இடம்: கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி, கிருஷ்ணன் கோயில் - 59.03 

40-வது இடம்: சாஸ்த்ரா எனப்படும் சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் & ஆராய்ச்சி அகாடமி (சாஸ்த்ரா),  தஞ்சாவூர் - 58.02 

45-ம் இடம்: சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை - 56.55 

47-ம் இடம்: எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, சென்னை - 56.08 

67-ம் இடம்: பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் - 50.64 

67-ம் இடம்: சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை - 50.64

87-ம் இடம்: வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை - 47.43 

100-வது இடம்: ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் - 45.55

Iit Madras Chennai Iit Engineering

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: