/indian-express-tamil/media/media_files/2025/07/18/best-engineering-colleges-2025-07-18-18-13-08.jpg)
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 58 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் டாப் 300 தரவரிசைக்குள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) எனப்படும் என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 58 பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் முதல் 300 தரவரிசைக்குள் இடம்பெற்றுள்ளதாக கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
வீடியோவின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 400க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், முதல் 300 இடங்களுக்குள் 40 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மீதமுள்ள 18 நிறுவனங்கள் ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகும்.
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகள்
1). தரவரிசை 20: அண்ணா பல்கலைக்கழக சி.இ.ஜி, எம்.ஐ.டி, ஏ.சி.டெக், எஸ்.ஏ.பி வளாகங்கள், சென்னை
2). தரவரிசை 47: எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
3). தரவரிசை 67: பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
4). தரவரிசை 100: ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
101 – 150 தரவரிசைக் குழு கல்லூரிகள்
5). சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காஞ்சிபுரம்
6). கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோவை
7). எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
8). கொங்கு இன்ஜினியரிங் காலேஜ், ஈரோடு
9). கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
10). பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு ரிசர்ச், கோவை
11). ராஜலெட்சுமி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
12) தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை
151 – 200 தரவரிசை குழு கல்லூரிகள்
13). குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, கோவை
14). மெப்கோ ஸ்லங் இன்ஜினியரிங் காலேஜ், சிவகாசி
15). ஆர்.எம்.கே இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
16). சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம்
17). ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் காலேஜ், கோவை
18). ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
19). ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
201 – 300 தரவரிசை குழு கல்லூரிகள்
20). ராஜலெட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
21). சவீதா இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
22). ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
23). ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், காஞ்சிபுரம்
24). கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோவை
25). பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
26). பி.எஸ்.என்.ஏ காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திண்டுக்கல்
27). செயிண்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சென்னை
28). ஆர்.எம்.கே காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சென்னை
29). ஆர்.எம்.டி இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
30). கற்பகம் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கோவை
31). ரத்தினம் டெக்னிக்கல் கேம்பஸ், கோயம்புத்தூர்
32). பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ், சென்னை
33). நேஷ்னல் இன்ஜினியரிங் காலேஜ், தூத்துக்குடி
34). எஸ்.என்.எஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
35). செயிண்ட் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை
36). இ.ஜி.எஸ் பிள்ளை இன்ஜினியரிங் காலேஜ், நாகப்பட்டினம்
37). ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, கோவை
38). கே. ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், திருச்சி
39). கே. ராமகிருஷ்ணா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி
40). எம். குமாரசாமி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், கரூர்
மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள்
1). 1-ம் இடம்: இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (ஐ.ஐ.டி சென்னை)
2). 9-ம் இடம்: தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (என்.ஐ.டி திருச்சி)
3). 14-ம் இடம்: எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
4). 16-ம் இடம்: வேலூர் தொழில்நுட்ப நிறுவனம், (வி.ஐ.டி வேலூர்)
5). 23-ம் இடம்: அமிர்த விஸ்வ வித்யாபீடம், கோயம்புத்தூர்
6). 33-ம் இடம்: கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமி, கிருஷ்ணன் கோயில்
7). 40-வது இடம்: சாஸ்த்ரா எனப்படும் சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் & ஆராய்ச்சி அகாடமி (சாஸ்த்ரா), தஞ்சாவூர்
8). 45-ம் இடம்: சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை
9). 67-ம் இடம்: சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
10). 87-ம் இடம்: வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை
101 - 150 தரவரிசை குழு நிறுவனங்கள்
11). ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், கோவை
12). காருண்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், கோவை
13). தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்
151 - 200 தரவரிசை குழு நிறுவனங்கள்
14). பி.எஸ் அப்துல் ரஹ்மான் க்ரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை
15). டாக்டர் எம்.ஜி.ஆர் எஜூகேஷ்னல் அண்ட் ரிசர்ட் இன்ஸ்டிடியூட், சென்னை
16). இந்திய தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம்
17). வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை
201 – 300 தரவரிசை குழு நிறுவனம்
18). அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.