இந்த ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் தரவரிசையில், நாட்டின் முதல் 100 பல்கலைக் கழகங்களில், ஒன்பது மாநிலப் பல்கலைக் கழகங்கள் உட்பட, தமிழகத்தில் இருந்து மொத்தம் 22 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
ஐஐடி மெட்ராஸ்; என்ஐடி; தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்; மற்றும் ஐஐஐடிடிஎம் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 24வது இடத்தையும் பெற்றுள்ளது. அழகப்பா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்தன.
பல்கலைக்கழகங்களில் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் தரவரிசை 2022 இல் 39 இல் இருந்து 2023 இல் 50 ஆக வீழ்ச்சியடைந்தாலும், அது அதன் ஒட்டுமொத்த மதிப்பீடு கடந்த ஆண்டு 70 லிருந்து 63 ஆக உயர்த்தியுள்ளது.
அண்ணா பல்கலை, 20ல் இருந்து 18க்கு இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், "ஆவணப்படுத்தல், பொறுப்புக்கூறல், உந்துதல்" தான் ஆகியவை தரவரிசை மேம்பட காரணம் என்று கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சுதந்திரமாக பணி செய்து வருகின்றனர். எங்கள் ஆசிரியர்களின் அனைத்து நற்சான்றிதழ்களையும் ஒருங்கிணைக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். இப்போது வரை, அவர்களின் பங்களிப்புகளில் 70% மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், பதவிகளால் அங்கீகரிப்பதன் மூலம் அவர்களது பணி பாராட்டப்பட்டது
இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறி உள்ளோம். நாட்டின் முதல் 10 பல்கலைக்கழகங்களில் இடம் பெறுவதே எங்கள் இலக்கு, என்று அவர் கூறினார்.
நிதிச் சிக்கல்களாலும், ஆசிரியர் பற்றாக்குறையாலும் பாதிக்கப்பட்டுள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகம் தரவரிசையில் கீழே சென்றது.
ஆனால் பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுத் துறையின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறுகையில், இங்கு பெரும்பாலான மாணவர்கள் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் இந்த நிறுவனம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச இடங்களை வழங்குகிறது.
பல்கலைக்கழகம் தரவை சரியாக வழங்கவில்லை என்பதை இது காட்டுகிறது. பல்கலைக்கழகம் 100க்கு 14 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளது. இவ்வளவு அதிக மதிப்புள்ள கூறுகளுக்கு இவ்வளவு குறைந்த மதிப்பெண் எப்படி வழங்கப்பட்டது என்பது என்ஐஆர்எஃப் தரவரிசையில் ஒரு கருப்பு புள்ளி, என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு, பல்கலை 36.5 மதிப்பெண் பெற்றிருந்தது.
இதுகுறித்து துணைவேந்தர் எஸ்.கௌரி கூறும்போது, எங்களிடம் படிக்கும் போதே சம்பாதிக்கலாம், விடுதிக் கட்டணமும் குறைவாக உள்ளது. ஆனால் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை, மேலும் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் நிலுவைத் தொகை தொடர்பாக மீண்டும் மீண்டும் போராட்டம் நடத்தியது கருத்து வீழ்ச்சிக்கு வழிவகுத்திருக்கலாம்.
வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை அறிவியல், வேளாண்மை, மீன்வளம் மற்றும் உணவுத் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான பிற மாநிலப் பல்கலைக்கழகங்கள் நாட்டின் முதல் 40 நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளன.
முதல் 100 கல்லூரிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை தமிழ்நாட்டில் உள்ளன, ஒன்பது சென்னையைச் சேர்ந்தவை, பிரசிடென்சி கல்லூரி பட்டியலில் முன்னணியில் உள்ளது.
கடந்த ஆண்டு முதல் 100 இடங்களுக்குள் 32 கல்லூரிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும் 15 சிறந்த பொறியியல் கல்லூரிகள்; 9 ஆராய்ச்சி நிறுவனங்கள்; மேலாண்மை படிப்புக்கு 11 கல்லூரிகள்; 10 ஃபார்மசி கல்வி நிறுவனங்கள்; சென்னை மருத்துவக் கல்லூரி உட்பட எட்டு சிறந்த மருத்துவக் கல்லூரிகள் மாநிலத்தில் இருந்து இடம்பிடித்தன.
மேலும் முதல் 30 பல் மருத்துவக் கல்லூரிகளில் ஆறு சென்னையிலும், ஒன்று கோவையிலும் உள்ளன.
இருப்பினும், இதில் இரண்டு சட்டக் கல்லூரிகள் மட்டுமே, இரண்டுமே தனியார் நிறுவனங்கள்.
ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐஐடிடிஎம், காஞ்சிபுரம் ஆகியவை புத்தாக்க வகையின் கீழ் (innovation category) பட்டியலிடப்பட்டுள்ளன.
பிரசிடென்சி கல்லூரி முதல்வர் ஆர். ராமன் கூறுகையில், கான்ஃபிரென்ஸ் மற்றும் எண்டெளமெண்ட் லக்ட்சர்ஸ் நடத்துவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. பட்டதாரி முடிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளது. எங்களிடம் சிறந்த முடிவுகள் மற்றும் அதிக ஆட்சேர்ப்பு உள்ளது, என்றார்.
அதிக ஆசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் அவை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகைகளில் இல்லை. பிராந்திய மொழிகளில் பொதுவான ஆராய்ச்சி இதழ்கள் இல்லை. துரதிர்ஷ்டவசமாக NIRF குறிப்பிடப்பட்ட பத்திரிகைகளைப் பார்க்கிறது, என்றார் ராமன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.