திருச்சி என்.ஐ.டியில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகத்தில், திருச்சி என்.ஐ.டி வளாகம் ஒன்பதாவது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் படிக்க விரும்பவர்களின் முக்கிய விருப்பம் திருச்சி என்.ஐ.டி ஆகும். தற்போது இந்த முன்னனி கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் கிரேடு - II காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021
உதவி பேராசிரியர் கிரேடு – II Assistant Professor (Grade II)
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 92
துறை வாரியான காலியிடங்களின் விவரம்
Architecture - 4
Chemical Engineering - 2
Chemistry - 5
Civil Engineering - 13
Computer Science & Engineering - 5
Computer Applications - 7
Electrical & Electronics Engineering - 5
Electronics & Communication Engineering - 10
Energy & Environment - 3
Humanities & Social Sciences - 3
Instrumentation & Control Engineering - 4
Management Studies - 3
Mathematics - 4
Mechanical Engineering - 5
Metallurgical & Materials Engineering - 8
Physics - 2
Production Engineering – 9
வயதுத் தகுதி: 24.09.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி SC/ST/OBC (Non-Creamy Layer)/PwD பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறைகளில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 70,900 முதல் ரூ.98,200
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruitment.nitt.edu/faculty2021/index.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி,
The Registrar, National Institute of Technology, Tiruchirappalli – 620015, Tamil Nadu
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.09.2021
விண்ணப்ப படிவங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 04.10.2021
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000, SC/ST பிரிவினருக்கு ரூ.500, பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruitment.nitt.edu/faculty2021/advt/1.a_General%20Information.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.