நித்தியானந்தா வழக்கு: டெல்லி பப்ளிக் ஸ்கூல் உரிமத்தை ரத்து செய்ய குஜராத் அரசு பரிந்துரை
கிழக்கு அஹமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு குஜராத் கல்வித் துறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு அஹமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு குஜராத் கல்வித் துறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
nithyanand case, Nithyanand school case fraud ,nithyanand escape, நித்த்யானதா gujarat govt, gujarat dps school, gujarat governemnt to cbse, gujarat dps school certificate,
கிழக்கு அஹமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் ஸ்கூலின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு குஜராத் கல்வித் துறை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) கோரிக்கை விடுத்துள்ளது.
Advertisment
டெல்லி பப்ளிக் பள்ளி வளாகத்தில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தப்படுவது தொடர்பாக குஜராத் அரசால் நடத்தப்பட்ட விசாரணையில்,"சிபிஎஸ்இ வாரியத்திடம் 22-11-2019 அன்று சமர்பித்த தடையின்மை சான்றிதழ் மாநில அரசின் கல்வித் துறையால் வழங்கப்படவில்லை" என்று கண்டறிந்துள்ளது. சான்றிதழ் மோசடி செய்துள்ளது தெளிவாக இருப்பதால், இது குற்றவியல் மோசடி வழக்காக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது, மாநில அரசாங்கத்திடம் தடையின்மை சான்றிதழ் இல்லாமல் ஒரு கல்வி நிறுவனம் தொடங்க முடியாது. எனவே, இந்த சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டு, சிபிஎஸ்இ வாரியத்திடம் அங்கீகாரம் பெற்றதாக குஜராத் கல்வித் துறை தெரிவித்து இருக்கிறது.
குஜராத் கல்வித்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், " டெல்லி பப்ளிக் ஸ்கூலை நிர்வகித்து வரும் கலோரிக்ஸ் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளைக்கும், நித்யானந்தேஸ்வர தேவஸ்தானம் அறக்கட்டளைக்கும் இடையில் 2019, ஜூலை 15ம் ஒப்பந்தம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டது. அதன்படி, பள்ளியைச் சேர்ந்த சில இடங்களையும், அதனோடு இணைந்த பகுதிகளையும், விடுப்பு மற்றும் உரிம ஒப்பந்தத்தின் கீழ் மாணவர்களுக்கு குருகுலம் கல்வி முறையை வழங்குவதற்காக தேவஸ்தானத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு விடப்படும். தேவஸ்தானம் டோக்கன் வாடையாக ஆண்டிற்கு ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும்" என்று தெரிய வந்திருக்கிறது.
Advertisment
Advertisements
கல்விச் செயலாளர் வினோத் ராவ் இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடத்தில் தெரிவிக்கையில்,“இங்கு கடுமையான விதிமீறல் நடந்திருக்கிறது. அந்த நிலம் அறக்கட்டளையின் பெயரில் கூட இல்லை, ஒரு விவசாயின் பெயரில் தான் உள்ளது. எனவே, இந்த நிலத்திற்கு விவசாயமற்ற பயன்பாட்டிற்கு அனுமதி இல்லை”என்றும் தெரிவித்தார்.
மேலும் விசாரணையில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளையும் மீறியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த பள்ளியின் அங்கீகாரத்தை அவசரமாக ரத்து செய்யுமாறு சிபிஎஸ்இக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று குஜராத் கல்விச் செயலாளர் ராவ் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ வாரியத்திடம் சமர்பித்த அனைத்து உண்மையான ஆவணத்தின் நகலையும் நாங்கள் கோரியுள்ளோம். இதன் மூலம், சான்றிதழ்களை தவறாக சித்தரித்தல், உருவாக்குதல் போன்ற செயல்களுக்காக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ : மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வரூப்
ஜனார்தன ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில் விஷயம் முதல்முறை வெடிக்க ஆரம்பித்தது. அவர், தனது நான்கு குழந்தைகளையும் எந்தவித முன்அனுமதியின்றி குஜராத்தில் இருக்கும் ஆசிரமத்தில் அனுப்பபட்டதற்காக காவல் துறையினரிடம் வழக்கு பதிவு செய்தார். பின்னர், சிபிஎஸ்இ கல்வி வாரியமும் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியது.
சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில், 2008ல் இருந்து இயங்கும் டெல்லி பப்ளிக் ஸ்கூலில், கிட்டத்தட்ட 850 மாணவர்களை படித்து வருகின்றனர். அதே நேரத்தில், ஆசிரமத்தில் தங்கி படிக்கும் 24 குழந்தைகளும், தங்கள் பள்ளியில் பதிவு செய்த மாணவர்கள் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்து இருக்கின்றது.
மாவட்ட கல்வி அலுவலர் (கிராமப்புற) ராகேஷ் வியாஸ் தலைமையிலான விசாரணைக் குழு பள்ளியிலிருந்து பெறப்பட்ட சில பொது ஆவணங்களை விசாரித்த போது, ஆசிரமத்தில் தங்கி படிக்கும் 24 மாணவர்களில், 18 மாணவர்களைப் பற்றிய போதுமான ஆவணங்கள் பள்ளியிடம் இல்லை. உதாரணமாக, முந்தைய பள்ளி விடுப்பு சான்றிதழ்கள் என எதையும் வாங்காமல் இந்த மாணவர்களை சேர்த்திருக்கின்றனர்" என்றார்.
மேலும், இதில் இருக்கும் நான்கு மாணவர்கள், பிறப்புச் சான்றிதழ்களின் அடிப்படையில் இந்தியாவுக்கு வெளியே பிறந்தவர்கள் என்று தெரிகிறது. மேலும்,பள்ளியில் சேர்க்கப்பட்ட மூன்று மாணவர்களின் சேர்கை சில நாட்களிலே ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும், இந்த மூன்று மாணவர்களுக்கு எந்த விதமான பள்ளி விடுப்பு சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை. ஆன்லைன் வருகையில் , இந்த மூன்று மாணவர்களுக்கும் 'பிரஸன்ட்' போடப்பட்டிருக்கிறது. நாங்கள் சரிபார்த்ததில், இந்த மூன்று மாணவர்களும் எந்த வகுப்புகளிலும் கலந்து கொள்ளவில்லை, ஆனால் எண்ணிக்கைகாக வெறுமனே சேர்க்கப்பட்டது போல் தோன்றுகிறது என்றார்.
கல்வி உரிமைச் சட்டம் 2009, ஆரம்பக் கல்விக்கான கல்வி உரிமை விதிகள்- 2012, இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை பிரிவுக்கான கல்வி ஒழுங்குமுறை சட்டம், 1974 போன்றவைகளை இந்த பள்ளிநிறுவனம் மீறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு அகமதாபாத் டி.பி.எஸ் பள்ளி தடையின்மை சான்றிதழ் விண்ணப்பித்தற்கான நிகழ்வுகளின் வரிசை :
செப்டம்பர் 11, 2009 அன்று, கலோரிக்ஸ் அறக்கட்டளை டெல்லி பப்ளிக் ஸ்கூல் 'தடையின்மை சான்றிதழுக்காக', குஜராத் இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியத்திடம் விண்ணபித்துள்ளனர்.
அக்டோபர் 1, 2009 அன்று, நிலம் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர், கட்டிட பயன்பாட்டு அனுமதி, தீ பாதுகாப்பு சான்றிதழ் போன்ற விவரங்களை சமர்பிக்குமாறு கல்வித்துறை இவர்களிடம் கேட்டிருக்கிறது.
ஜனவரி 1, 2010 இல், கல்வித் துறை மீண்டும் விண்ணப்பதாரருக்கு மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களை வழங்கும் மாறு கடிதம் எழுதியது.
அக்டோபர் 1, 2011 அன்று, கல்வித் துறை மீண்டும் விண்ணப்பதாரருக்கு மேலே குறிப்பிடப்பட்ட தகவல்களை வழங்கும் மாறு கடிதம் எழுதியது.
-பிப்ரவரி 4, 2012 அன்று, சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைவதற்கு தேவைப்படும் தடையின்மை சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்பம் கல்வித் துறையால் நிராகரிக்கப்பட்டது. பள்ளிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் இந்த நிலம் இன்னும் வேளாண் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றப்படவில்லை என்று விண்ணப்பதாரர்களுக்கு தகுந்த பதிலையும் கொடுத்தது.