Advertisment

நெய்வேலி என்.எல்.சி-யில் 550 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
நெய்வேலி என்.எல்.சி-யில் 550 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NLC india invites application for Diploma and Engineering apprentice training: தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கான தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 550 பயிற்சியிடங்கள் நிரப்பட உள்ளன.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா,  கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியிலிருந்து தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 550 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10.02.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பயிற்சி விபரங்கள்

Graduate Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 250

Electrical & Electronics Engineering - 70

Electronics & Communication Engineering - 10

Instrumentation Engineering - 10

Civil Engineering - 35

Mechanical Engineering - 75

Computer Science and Engineering - 20

Chemical Engineering - 10

Mining Engineering - 20

கல்வித் தகுதி: 2019/2020/2021 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Degree in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 15,028

Technician (Diploma) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 300

Electrical & Electronics Engineering - 85

Electronics & Communication Engineering - 10

Instrumentation Engineering - 10

Civil Engineering - 35

Mechanical Engineering - 90

Computer Science and Engineering - 25

Mining Engineering - 30

Pharmacy - 15

கல்வித் தகுதி: 2019/2020/2021 ஆம் ஆண்டுகளில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 12,524

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பயிற்சி பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க http://www.nlcindia.in  என்ற இணையதளத்தில் Trainees & Apprentices என்ற பிரிவில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : The General Manager, Learning & Development Centre, N.L.C India Limited. Block:20. Neyveli – 607 803.

இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.02.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/GAT-TAT%20Online%20notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Nlc Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment