தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 295 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22 கடைசி தேதியாகும்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 295 கிராஜூவேட் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Graduate Executive Trainee
காலியிடங்களின் எண்ணிக்கை: 295
Mechanical Engineering - 120
Electrical & Electronics Engineering - 109
Civil Engineering – 28
Mining Engineering – 17
Computer Science and Engineering - 21
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.11.2023 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: வருடத்திற்கு ரூ. 13.32 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 854. எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுதிறனாளிகள்/ முன்னாள் இராணுவத்தினர் பிரிவினருக்கு ரூ.354
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2023
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/08-2023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“