NLC Jobs; என்.எல்.சியில் 481 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 481 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

NLC Jobs; என்.எல்.சியில் 481 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

NLC India recruitment 2022 for 481 Diploma, Engineering Graduate Apprentices apply soon: தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 481 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 24 கடைசி தேதியாகும்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகத்தில் உள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 481 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் மற்றும் வீடு வழங்கியவர்களுக்கான பணியிடங்களாகும்.

இதையும் படியுங்கள்: SSC; மத்திய ரிசர்வ் போலீஸில் 4300 எஸ்.ஐ பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Engineering Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 201

Mechanical Engineering – 50

Electrical & Electronics Engineering – 50

Civil Engineering – 18

Mining Engineering – 25

Instrumentation Engineering – 8

Chemical Engineering – 5

Computer Science and Engineering – 30

Electronics & Communication Engineering – 8

Pharmacist – 7

கல்வித் தகுதி: 2020/2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 15,028

Technician (Diploma) Apprentices

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 105

Electrical & Electronics Engineering – 50

Electronics & Communication Engineering – 5

Instrumentation Engineering – 5

Civil Engineering – 25

Mechanical Engineering – 50

Computer Science and Engineering – 20

Mining Engineering – 20

கல்வித் தகுதி: 2020/2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 12,524

Commerce – 25

கல்வித் தகுதி: B.Com படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Computer Science – 35

கல்வித் தகுதி: Bsc., Computer Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Computer Application – 20

கல்வித் தகுதி: BCA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Business Administration – 20

கல்வித் தகுதி: BBA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Geology – 5

கல்வித் தகுதி: Bsc., Geology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 24.08.2022 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 31.08.2022 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி,

பொது மேலாளர்,

நில எடுப்பு அலுவலகம்,

என்.எல்.சி இந்தியா நிறுவனம்,

வட்டம்- 20, நெய்வேலி- 607803.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20PAPS-GAT-TAT.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Nlc india recruitment 2022 for 481 diploma engineering graduate apprentices apply soon