Advertisment

NLC Jobs; என்.எல்.சியில் 103 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 103 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NLC

என்.எல்.சி வேலைவாய்ப்பு

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 103 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், செவிலியர், உதவியாளர், ஆய்வக நுட்புனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்: சென்னை மத்திய அரசு நிறுவன வேலை வாய்ப்பு; டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Male Nursing Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், Nursing Assistant/Multipurpose Hospital Worker படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Female Nursing Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 22

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், Nursing Assistant/Multipurpose Hospital Worker படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Maternity Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், Auxiliary Nurse Midwife / DGNM படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Panchakarma (Ayurveda) Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Pancha Karma Therapy Course / Diploma in Nursing Therapy (DNT) / Diploma in Pancha Karma Therapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: B.Sc in Radiology & Imaging Science Technology/B.Sc in Medical Radiology & Imaging Technology/B.Sc in Radiology & Imaging Technology/B.Sc in Medical Technology (Radio Diagnosis & Imaging)/B.Sc in Medical Technology (Radiology & Imaging)/Bachelor of Medical Radiology & Imaging Technology/B.Sc in Radiography/B.Sc in Medical Technology in Radiography படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: B.Sc MLT படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Dialysis Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.Sc Degree in Dialysis Technology/Renal Dialysis Technology/Dialysis Therapy/B.Voc (Renal Dialysis Technology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Emergency Care Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: B.Sc degree in Emergency Care Technology/Emergency Medicine Technology/Accident & Emergency Care Technology/Critical Care Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Bachelor of Physiotherapy (BPT)/ Master of Physiotherapy (MPT) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 36,000

Nurses

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: B.Sc Nursing/Post Basic B.Sc Nursing and DGNM படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 36,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.06.2023.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Engagement%20of%20Nurses%20&%20Paramedics%20notification%20may%202023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nlc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment