Advertisment

NLC Jobs; என்.எல்.சி-யில் 92 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 92 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NLC Neyveli workers protest letter to Cuddalor police Tamil News

NLC India Limited

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 92 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 04.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

SME Operator

காலியிடங்களின் எண்ணிக்கை: 92

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும், மற்றும் 5 வருட அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 63 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 38,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 04.09.2023.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு ரூ. 486, எஸ்.சி, எஸ்.டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 236.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Advt%20SME%20FTE%2017082023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nlc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment