தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 239 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் ஒடிசாவில் உள்ள சுரங்க அலுவலகங்களில் நிரப்பப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 19.04.2024
Industrial Trainee/SME & Technical (O&M)
காலியிடங்களின் எண்ணிக்கை: 100
கல்வித் தகுதி: Diploma in Engineering படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: முதல் வருடம் ரூ. 18,000, இரண்டாம் வருடம் ரூ. 20,000, மூன்றாம் வருடம் ரூ. 22,000
Industrial Trainee (Mines & Mines Support Services)
காலி இடங்களின் எண்ணிக்கை: 139
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
ஊக்கத்தொகை: முதல் வருடம் ரூ. 14,000, இரண்டாம் வருடம் ரூ. 16,000, மூன்றாம் வருடம் ரூ. 18,000
வயது தகுதி: 01.03.2024 அன்று 37 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.04.2024
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“