தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இன்ஜினியரிங், டிகிரி, எம்.பி.பி.எஸ் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 334 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.12.2024 கடைசி தேதியாகும்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 334
Executive Engineer (Mechanical) - 89
Deputy General Manager (Mechanical) – 5
Deputy Chief Engineer (Mechanical) – 52
Additional Chief Manager (Mechanical) – 3
Executive Engineer (Electrical) – 23
Deputy Chief Engineer (Electrical) – 27
Additional Chief Manager (Electrical) – 4
Deputy General Manager (Electrical) – 2
General Manager (Electrical) – 3
Executive Engineer (Civil) – 36
Deputy General Manager (Civil) – 3
Deputy Chief Engineer (Civil) – 11
Additional Chief Manager (Civil) - 3
General Manager (Civil) – 1
Executive Engineer (Control & Instrumentation) – 8
Executive Engineer (Environmental Engineering) – 3
Manager (Scientific) – 1
Assistant Executive Manager (Scientific) – 2
Manager (Geology) – 3
Deputy Chief Manager (Geology) – 1
Executive Engineer (MME) – 6
Deputy General Manager (Commercial) – 2
Deputy Chief Manager (Finance) – 6
Deputy General Manager (Finance) – 2
General Manager (Finance) – 4
Deputy General Manager (Secretarial) – 1
Deputy General Manager (Legal) – 1
Manager (HR) (Community Development) – 4
Medical Officer - 10
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிகிரி, இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு எம்.பி.பி.எஸ் படித்திருக்க வேண்டும். மேலும் பதவிக்கு ஏற்றவாறு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 13 லட்சம் முதல் 32 லட்சம் வரை, பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்.
வயது தகுதி: 36 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். விண்ணப்பக்க கட்டணம் ரூ. 800, எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2024
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Advt.No.182024_details.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.