தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 505 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 02.09.2024 கடைசி தேதியாகும்.
Engineering Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 197
Mechanical Engineering - 50
Electrical Engineering - 50
Civil Engineering – 17
Instrumentation Engineering - 7
Chemical Engineering - 5
Mining Engineering – 25
Computer Science and Engineering – 30
Electronics & Communication Engineering – 8
Pharmacist - 5
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும்
உதவித் தொகை; ரூ. 15,028
Non Engineering Graduate Apprentices
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 155
Commerce - 50
Computer Science - 40
Computer Application - 25
Business Administration - 25
Geology - 5
Chemical - 8
Micro Biology - 2
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும்
உதவித் தொகை; ரூ. 12,524
Technician (Diploma) Apprentices
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 153
Mechanical Engineering - 45
Electrical Engineering - 45
Civil Engineering - 10
Instrumentation Engineering - 5
Mining Engineering - 17
Computer Science and Engineering - 10
Electronics & Communication Engineering – 5
Medical Lab technology/ Laboratory Technology - 5
X ray -Technician / Technician X-ray - 2
Catering Technology & Hotel Management - 6
Pharmacist 3
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/2024 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 12,524
வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2024
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.