தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 588 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 23.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Graduate Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை: 336
Mechanical Engineering - 84
Electrical Engineering - 81
Civil Engineering - 26
Instrumentation Engineering - 12
Chemical Engineering - 10
Mining Engineering - 49
Computer Science Engineering - 45
Electronics & Communication Engineering - 4
Nursing - 25
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 15,028 (Nursing – 12,524)
Technician Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை: 252
Mechanical Engineering - 77
Electrical Engineering - 73
Civil Engineering - 19
Instrumentation Engineering - 7
Mining Engineering - 30
Computer Science Engineering - 18
Electronics & Communication Engineering - 8
Nursing - 20
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 12,524
வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited. Neyveli – 607803.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Advt.4-2024_Details.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.