தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 632 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும்.
Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை: 314
Mechanical Engineering - 75
Electrical Engineering - 78
Civil Engineering – 27
Instrumentation Engineering - 15
Chemical Engineering - 9
Mining Engineering – 44
Computer Science and Engineering - 47
Electronics & Communication Engineering – 5
Pharmacist - 14
கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும்
உதவித் தொகை; ரூ. 15,028
Technician (Diploma) Apprentices
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 318
Mechanical Engineering - 95
Electrical Engineering - 94
Civil Engineering - 49
Instrumentation Engineering - 9
Mining Engineering - 25
Computer Science and Engineering - 38
Electronics & Communication Engineering - 8
கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ. 12,524
வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01.2024 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 06.02.2024 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
முகவரி: The General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli – 607 803.
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20-GAT%20&TAT-2023-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“