NLC Jobs; என்.எல்.சியில் 675 பணியிடங்கள்; ஐடிஐ & டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

NLC job vacancies 675 apprentice training for ITI degree apply soon: ஐடிஐ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; என்.எல்.சியில் 675 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க

தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐடிஐ மற்றும் வணிகவியல் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 675 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசி தேதியாகும்.

இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியில், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, என்.எல்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 675 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Fitter – 90

Turner – 35

Mechanic (Motor Vehicle) – 95

Electrician – 90

Wireman – 90

Mechanic (Diesel) – 05

Mechanic (Tractor) – 05

Carpenter – 05

Plumber – 05

Stenographer – 15

Welder – 90

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்; ரூ. 10,019

PASAA – 30

கல்வித் தகுதி: COPA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,766

Accountant – 40

கல்வித் தகுதி: 2019 / 2020 / 2021 – வருடத்தில் B.Com இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Data entry operator – 40

கல்வித் தகுதி: 2019 / 2020 / 2021 – வருடத்தில் B.Sc.(Computer Science) / BCAஇல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

Assistant(HR) – 40

கல்வித் தகுதி: 2019 / 2020 / 2021 – வருடத்தில் BBA இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: 12, 524

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

வயது தகுதி: 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 25.08.2021 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM ல் பூர்த்தி செய்து விண்ணப்பப்படிவத்தினை PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப்படிவத்தினை 30.08.2021 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி,

பொது மேலாளர்,

கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,

என்.எல்.சி இந்தியா நிறுவனம்,

வட்டம்- 20, நெய்வேலி- 607803.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Exit-ITI-aug.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nlc job vacancies 675 apprentice training for iti degree apply soon

Next Story
50% வருகை, உடல் வெப்ப பரிசோதனை; பள்ளிகள் திறப்பிற்கான நெறிமுறைகள் வெளியீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com