NEET UG 2024 பாடத்திட்டம்: தேசிய மருத்துவ ஆணையம் (NMC) 2024 தேர்வுகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு - இளங்கலை (NEET UG) பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது. NEET UG 2024 பாடத்திட்டத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் உள்ள பட்டதாரி மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) இறுதி செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) NEET UG தேர்வை நடத்துகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: NMC announces NEET UG 2024 syllabus
மாணவர்கள் NEET UG 2024 பாடத்திட்டத்தை NMC அதிகாரப்பூர்வ இணையதளமான nmc.org.in இல் பார்க்கலாம். NEET UG பாடத்திட்டம் 2024 இணையதளத்தில் குறிப்புக்காகவும் ஆய்வுப் பொருட்களைத் தயாரிக்கவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
“பொதுமக்களின் குறிப்புக்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் இது பதிவேற்றப்பட்டுள்ளது. NEET (UG)-2024 க்கான புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை ஆய்வுப் பொருட்களைத் தயாரிப்பதற்கும், 2024-25 ஆம் ஆண்டுக்கான NEET (UG) தேர்வுகளைத் தயாரிப்பதற்கும் பங்குதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று NMC அறிக்கை கூறியது.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கு இந்தியாவில் நடத்தப்படும் ஒரே தேர்வு நீட் தேர்வுதான். NEET 2024 தேர்வு தேதியையும் NTA அறிவித்துள்ளது. NTA NEET UG தேர்வுகள் மே 5, 2024 அன்று நடைபெற உள்ளன. NEET UG 2024 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டாலும், விண்ணப்பப் பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“