தேசிய மருத்துவ ஆணையம் (NMC) புதன்கிழமை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும், இன்டர்ன்ஷிப் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லூரியும் செலுத்தும் உதவித்தொகையின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, தேசிய மருத்துவ ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
MBBS மாணவர்களுக்கு அவர்களின் இன்டர்ன்ஷிப்பின் போது உதவித்தொகை வழங்காத வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவு வந்தது.
அனைத்து கல்லூரிகளும் அந்தந்த மாநில அரசு வழங்கிய உதவித்தொகை மற்றும் கல்லூரி வழங்கிய உதவித்தொகை மற்றும் அதன் மாத வாரியான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த தரவு MBBS பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்ல, ஜூனியர் ரெசிடெண்ட்ஸ் ஆக பணிபுரியும் முதுகலை மாணவர்கள் மற்றும் தொடர்புடைய மருத்துவமனையில் சீனியர் ரெசிடெண்ட்ஸ் ஆக பணிபுரியும் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மாணவர்களுக்கானது.
2024-25 முதல், கல்லூரிகள் ஒவ்வொரு மாதமும், ஐந்தாம் தேதிக்குள் வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களை தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இந்த ஆண்டு இறுதியில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, தேசிய மருத்துவ ஆணையம் கல்லூரிகளை கேட்டுக் கொண்டது.
கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய ஆன்லைன் சர்வேயில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மாணவர்களின் 7,901 பதில்களில் 2,000 க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
4,300 மாணவர்கள் தங்களின் உதவித்தொகை அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு சமமாக இல்லை என்று கூறியுள்ளனர். 1,228 மாணவர்கள் தங்களின் உதவித்தொகையை, கல்லூரி நிர்வாகம் திரும்பப் பெறுவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
Read in English: NMC asks medical colleges to submit details of stipends paid to interns, resident doctors
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“