என்.எம்.சி யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய மொத்த எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான சீட்களின் எண்ணிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்.ஏ.பி வியூஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
மார்ச் 31 நிலவரப்படி இந்தியாவில் இருக்கக்கூடிய மொத்த எம்.பி.பி.எஸ் படிப்புகள் எண்ணிக்கை 1,18,190 ஆகும். இதில் கூடுதலான சீட்கள் ஏதேனும் உள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதுகுறித்து என்.எம்.சி ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. கல்லூரிகளுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை தான் இருப்பினும் இதன் மூலம் மொத்தம் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் எவ்வளவு என்றும் கல்லூரிகள் எத்தனை என்றும் தெரிந்து கொள்ள முடியும்.
இதில் மாநிலங்கள் வாரியாக அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள சீட்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 780 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. அங்கு மருத்துவர் களுக்கான சீட்டுகளின் எண்ணிக்கை 1,18,190 ஆகும்.
Advertisment
Advertisements
இதில் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றிலும் எத்தனை கல்லூரிகள் எத்தனை இடங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். கூடுதலாக ஏதேனும் சீட்கள் உள்ளதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.