New Update
00:00
/ 00:00
தமிழகத்தில் புதிதாக மேலும் 5 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்த ஊர்களில் அமைய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக மேலும் 5 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஓங்கூர், விருதுநகா் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர், விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் ஆகிய இடங்களில் புதியதாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் புதிதாக 5 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டது தொடா்பாக தேசிய மருத்துவ அணையம் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில், புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும், மருத்துவ இடங்களை அதிகரிப்பதற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். அதனால், நாடு முழுவதும் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், புதியதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் கோரும் விண்ணபங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தால் பெறப்படுகிறது.
அதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு மொத்தம் 170-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து விண்ணப்பங்கள் இணையவழியில் சமா்ப்பிக்கப்பட்டதாகவும், அவற்றில் 112 விண்ணப்பங்கள் புதி கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், 58 விண்ணப்பங்கள் எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிப்பதற்கும் அனுப்பப்பட்டிருந்ததாகவும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களில், தமிழகத்தைப் பொருத்தவரை விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் கிராமத்தில் தக்ஷசீலா மருத்துவக் கல்லூரி, விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்டம், பென்னலூரில், அன்னை மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், அவனம்பட்டில் ஜே.ஆா். மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தில் கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகை தகவல், பிற விவரங்கள் மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்டவா்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.