Advertisment

மருத்துவ கல்லூரிகளுக்கு தர மதிப்பீடு; முதல் முறையாக அறிமுகம் செய்யும் மருத்துவ கவுன்சில்

இந்திய மருத்துவ கல்லூரிகளுக்கு முதன்முறையாக தர மதிப்பீட்டை வழங்கும் தேசிய மருத்துவ ஆணையம்; அடுத்த அமர்வில் இருந்து தொடக்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

இந்திய மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களுக்கு வழங்கும் கல்வியின் தரத்தின் அடிப்படையில் அரசாங்க மதிப்பீடுகளை முதன்முறையாக பெற உள்ளன. நாட்டின் உச்ச மருத்துவக் கல்விக் கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ ஆணையம், இந்தியத் தரக் கவுன்சிலுடன் (QCI) இணைந்து, மருத்துவ கல்லூரிகளுக்கான மதிப்பீட்டை வழங்க உள்ளது.

Advertisment

அடுத்த அமர்வில் இருந்து மதிப்பீட்டு செயல்முறை தொடங்கும். ’மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு விதிமுறைகள், 2023’ இன் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இந்த விதிமுறைகள் மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீடுகள் மற்றும் தரத்தை அரசு தளத்தின் கீழ் நடத்த வேண்டும் என்று கூறுகிறது.

இதையும் படியுங்கள்: நெக்ஸ்ட் தேர்வால் கவலை; மருத்துவ மாணவர்கள் மத்தியில் எழும் 7 முக்கிய கேள்விகள்

சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் நம்பகத்தன்மை சிக்கல்களின் பின்னணியில் இந்த மதிப்பீட்டு செயல்முறை வருகிறது, ஏனெனில் அந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மதிப்பீடுகள் தனியார் நிறுவனங்களால் செய்யப்படுகின்றன. இதுவரை, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) மட்டுமே இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவக் கல்விக்கு பெயர் பெற்ற நிறுவனமாக உள்ளது. ஆனால், பல தனியார் மருத்துவக் கல்லூரி தாங்கள் தான் சிறந்த கல்லூரி என்று கூறிவருகின்றன.

எனவே, அரசின் மதிப்பீடுகள் பொதுக் களத்தில் வந்தவுடன், அவை மாணவர்களுக்கு சரியான மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நடைமுறையைத் தடுக்கவும் உதவும்.

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய தரக் கவுன்சில் நிபுணர்கள் மருத்துவக் கல்லூரிகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றி தரமான கல்வியை மற்ற அளவுகோல்களுடன் வழங்குகிறார்களா என்பதைக் கண்டறிய திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

"தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ தர மற்றும் மதிப்பீட்டு வாரியம் (MARB) மருத்துவக் கல்லூரிகளை மதிப்பிடும் நோக்கத்திற்காக இந்திய தர கவுன்சிலுடன் (QCI) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதில் QCI தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மூன்றாம் தரப்பு மதிப்பீட்டை வழங்கும்,” என்று மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறினார்.

”இந்த மதிப்பீடு மருத்துவக் கல்லூரிகளால் வழங்கப்படும் உயர்தர மருத்துவக் கல்வி மற்றும் சேவைகளை உறுதி செய்யும். மருத்துவக் கல்விச் சூழலில் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உயர் தரத்தைக் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டு, மருத்துவக் கல்லூரிகளை தரவரிசைப்படுத்துவதற்கான மதிப்பீட்டு செயல்முறை இதுவே முதல் முறையாகும்," என்று அந்த அதிகாரி கூறினார்.

புதிய மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கு அனுமதி வழங்குதல், MBBS/ PG/ Super-Speciality இடங்களை அதிகரிப்பது, ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதியைப் புதுப்பித்தல், மருத்துவக் கல்லூரிகளில் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற பணிகளை MARB மேற்கொள்ளும்.

2014 முதல், நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, 2014க்கு முன் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 704 ஆக 70% அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment