தேசிய மருத்துவ ஆணையம் (NMC) எம்.பி.பி.எஸ் (MBBS) தேர்ச்சி மதிப்பெண்களை 40 சதவீதமாகக் குறைப்பதற்கான வழிகாட்டுதல்களை அக்டோபர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றுள்ளது. எம்.பி.பி.எஸ் தேர்ச்சி மதிப்பெண்களில் கட்-ஆஃப் 40 சதவீதமாகக் குறைப்பது சாத்தியமில்லை என்று கூறிய தேசிய மருத்துவ ஆணையம், விஷயத்தை முழுமையாகப் பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
ஆங்கிலத்தில் படிக்க: NMC withdraws decision on reduction in MBBS passing marks to 40%
முன்னதாக செப்டம்பரில், இரண்டு தாள்கள் கொண்ட எம்.பி.பி.எஸ் பாடங்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை 40 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் குறைத்தது. இதற்காக, பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண்கள் தொடர்பான திறன் அடிப்படையிலான மருத்துவக் கல்வி (CBME) பாடத்திட்ட வழிகாட்டுதல்களை ஆணையம் திருத்தியது.
செப்டம்பர் 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட திருத்தப்பட்ட CBME வழிகாட்டுதல்களின்படி, NMC கூறியது: "இரண்டு தாள்களைக் கொண்ட பாடங்களில், மாணவர் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற மொத்தமாக (இரண்டு தாள்களும் ஒன்றாக) குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்."
தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்கள் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி மதிப்பெண்களை திருத்தியிருந்தாலும், தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பது நல்ல நடவடிக்கை என்று பல மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“