Advertisment

ஒரு ஆசிரியர், மாணவர்கள் கூட இல்லை... மூடுவிழாவை நோக்கி புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவனம்!

மண்ணின் பெருமையை ஆவணப்படுத்தி வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம், ஒரு ஆசிரியர், மாணவர்கள் கூட இல்லாத நிறுவனமாக அவப்பெயரை சந்தித்து, மூடுவிழாவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
New Update
No professor and no Students in Puducherry Institute Of Linguistics And Culture Tamil News

மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 இணை பேராசிரியர்கள் பணியில் இருக்கும்போது தலா 6 மாணவர்கள் வீதம் 72 பேருக்கு பி..எச்.டி.,படிப்பில் வழிகாட்ட முடியும்.

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

Advertisment

புதுச்சேரியில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் 1986 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கலை பண்பாட்டுதுறையின் கீழ் செயல்படும் இந்நிறுவனம், மாநிலத்தில் உள்ள கவிஞர்கள், மானிடவியல்,இலக்கியம், பண்பாட்டு தளங்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது. அத்துடன் எம்.பில்., பி.எச்.டி. படிப்புகளையும் நடத்தி, ஆய்வாளர்களுக்கு பட்டங்களை வழங்கி வருவதோடு, பிற மாநிலத்தவர் மற்றும் நாட்டினருக்கு தமிழ் கற்பிக்கப்படுகிறது.

இலக்கியம், மொழியியல், பண்பாட்டு இயல் என மூன்று துறைகளை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 12 பேராசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆனால், இன்றைக்கு நிறுவனத்தில், ஒரு பேராசிரியர்கள் கூட பணியில் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மொழியில் பண்பாட்டு நிறுவனத்திற்கு பி.எச்.டி.,படிப்பில் ஒரு மாணவர்கள் கூட சேர்க்கப்படவில்லை.

மொழியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 12 இணை பேராசிரியர்கள் பணியில் இருக்கும்போது தலா 6 மாணவர்கள் வீதம் 72 பேருக்கு பி..எச்.டி.,படிப்பில் வழிகாட்ட முடியும். பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பணியாண்டுகள் இருந்தால் மட்டுமே பி.எச்.டி.,வழிகாட்ட ஒப்புதல் கிடைக்கும். ஆனால், அனைத்து பேராசிரியர்களும் ஓய்வு பெற்றுவிட்டதால், பி.எச்.டி.,மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. 

இது பி.எச்.டியை., எதிர்பார்திருந்த ஆய்வு மாணவர்களுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.ல்.,படிப்பினை பொருத்தவரை 12 இணை பேராசிரியர்கள் இருந்தால் 24 மாணவர்கள் எம்.பில்., படிக்கலாம். ஆனால் ஒரு பேராசிரியர்கள் கூட பணியில் இல்லாததால் எம்.பி.எல்.,படிப்பில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை.  

ஆசிரியர் - மாணவர்கள் தான் இப்படி என்றால், நிர்வாக ஊழியர்களின் கதையும் கழுதை கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது. கல்லுாரிக்கு இயக்குனர் நியமிக்கப்படவில்லை. கலை பண்பாட்டு துறை இயக்குனர் பொறுப்பு அடிப்படையில் கவனித்து வருகிறார். பத்து பேர் இருக்க வேண்டிய அலுவலகத்தில் ஒரு யு.டி.சி.,ஒரு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் என மொத்தம் 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்றவர்கள் தெரிந்தவர்களை பிடித்து,வேறு துறைகளுக்கு  மாறிவிட்டனர். 

இதைத் தவிர ஒரு நுாலகர் மட்டுமே உள்ளார். அவரும் ஒரு சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளனர். இந்த நான்கு பேருடன், ஒப்புக்கு ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது, ஒரு மாணவர், ஒரு பேராசிரியர் இல்லாத அவப்பெயரை நிறுவனம் சந்தித்துள்ளது. இப்படியே போனால் சில மாதங்களில் ஊழியர்களே இல்லாத ஒரு நிறுவனம் என்ற அவப்பெயரை சந்திக்கும்/ மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சொசைட்டியாகத் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய தேர்வாணையம் வரை கோப்பு அனுப்பி காலியிடங்களை நிரப்ப தேவையில்லை. மாநில அரசே முடிவு செய்து, பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிவிடலாம்.

ஆனால் 9 காலியிடங்களை நிரப்புதவதற்காக கோப்பு அனுப்பப்பட்டது. நியமன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. குறைந்தபட்சமாக 4 பேராசிரியர் பணியிடங்களை நிரப்பலாம் என திட்டமிடப்பட்டது. ஆனாலும் இன்னும் முடிவெடுக்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருவதால், மாணவர் சேர்க்கையும் நடத்தப்படவில்லை. இவ்விஷயத்தில் கவர்னர், முதல்வர் நேரடியாக கவனம் செலுத்தி, மீண்டும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உயிரூட்டி,மண்ணின் பெருமைகளை ஆவணப்படுத்த வேண்டும்.

மண்ணுக்கு முன்னுரிமை 

மாநிலத்தில் தமிழில் எம்.பில்., பி.எச்.டி., ஆய்வு படிப்பை முடித்துவிட்டு ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர். இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில்உள்ளூர் பேராசிரியர்களை கொண்டே நேர்காணலை நடத்த வேண்டும்.அதில் தகுதியான பேராசிரியர்கள் கிடைக்காத பட்சத்தில் தமிழக அளவில் அந்தந்த துறைகளில் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நிரப்பலாம்.மாநில அரசு இவ்விஷயத்தில்தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment