Air India Recruitment 2019: ஏர் கிராஃப்ட் மெயிண்டெனென்ஸ் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் அறிவித்துள்ளது.
இதற்கான நேர்காணல் ஏப்ரல் 1 முதல் 12 வரை நடைபெறுகிறது.
காலியிடங்கள்
மொத்தம் 160
ஊதியம்
கல்வி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து ஊதியம் நிர்ணயிக்கப்படும். இருப்பினும் 95,000 முதல் 1,28,000 வரை சம்பளம் கிடைக்கக் கூடும்.
படிப்பு
இயற்பியல், வேதியல் மற்றும் கணிதத்துடன் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துறை தகுதி
விண்ணப்பதாரர்கள் DGCA சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
A320 NEO ஏர் கிராஃப்டில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
செய்முறை மெயிண்டெனென்ஸில் குறைந்தபட்சம் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பொதுப்பிரிவினர் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு 60.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 1000 ரூபாய்க்கு டி.டி மற்றும் சான்றிதழ்களோடு, டெல்லியிலுள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தை நேரில் அணுகவும்.
மேலும் தகவல்களுக்கு https://www.airindia.in/careers.htm தளத்தை விசிட் செய்யவும்.