பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் குவிக்கின்றன.
ஒவ்வொரு பணிக்கும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு பேரம் பேசி வருகின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
இதன் காரணமாக பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் மற்றும் காவலர் பணியிடங்கள் என 500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்து வந்தன.
இதன் காரணமாக கோயில் பணிகளில் தொய்வு ஏற்பட்டதுடன் தற்போதுள்ள பணியாளர்களுக்கு பணிச்சுமைகள் அதிகரித்து வந்தன.
இதன் காரணமாக தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் பொறியாளர்கள் காவலர்கள் உள்ளிட்ட 281 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பங்கள் அளிப்பதற்கு ஏப்ரல் ஏழாம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை நேரடியாகவும் தபால்கள் மூலமாகவும் விண்ணப்பங்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது வரை 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் கடைசி தினத்திற்குள் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னணியில் ஒவ்வொரு பணியிடத்துக்கும் ஒரு பல லட்சம் ரூபாய் பேரம் பேசப்படுகிறது. இந்த பேரத்தில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இது விண்ணப்பித்த பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/