மும்பையை தலைமை இடமாக கொண்டு மத்திய அரசின் என்.பி.சி.ஐ.எல் எனும் இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation Of India) செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதன் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன், பிட்டர், பராமரிப்பாளர் உள்ளிட்ட இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 279 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஸ்டைபென்டியரி டிரெய்னி (ST/TN) ஆபரேட்டர், பராமரிப்பாளர், எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பக்க செம்டம்பர் 11ம் தேதி கடைசி தேதியாகும்.
கல்வித் தகுதி
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்.
எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ், மெஷினிஸ்ட், டர்னர், வெல்டர் ஆகிய பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் ரூ. 21700 வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி செம்டம்பர் 11 ஆகும். www.npcilcareers.co.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“