இந்திய அணுமின் கழகத்தில் வேலை வேண்டுமா ? 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்...

NPCIL Released Notification for 162 Posts : விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

NPCIL Recruitment 2019 :  இந்திய அணுமின் கழகத்தில் வேலை இருப்பதாக அக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL Recruitment 2019 – எந்தெந்த பணிகளுக்கு ஆட்கள் தேவை

ட்ரெய்னி / சயிண்டிஃபிக் அசிஸ்டண்ட் பிரிவு (Stipendiary Trainee/Scientific Assistant – Category-I )

சயிண்டிஃபிக் அசிஸ்டன்ட் / பி ( Scientific Assistant/B )

ஸ்டைபெண்டியரி ட்ரெய்னி/டெக்னீசியன் – கேட்டகிரி – 2 (Stipendiary Trainee/Technician – Category-II ) ஆகிய பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுகள்

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜனவரி 31, 2019 ஆகும்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.

காலியாக இருக்கும் பணியிடங்கள்

ஸ்டைபெண்டியரி ட்ரெய்னீஸ்/ சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் கேட்டகிரி 1 – 51

ஸ்டைபெண்டியரி ட்ரெய்னீஸ்/ சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட் கேட்டகிரி 2 – 6

சயின்டிஃபிக் அசிஸ்டெண்ட்/பி – 7

ஸ்டைபெண்டியரி ட்ரெய்னீஸ் / டெக்னீசியன்கள் – கேட்டகிரி 1 – 51

ஸ்டைபெண்டியரி ட்ரெய்னீஸ் / டெக்னீசியன்கள் – கேட்டகிரி 2 – 47

மொத்தம் 162 பணியிடங்கள் இந்திய அணுமின் கழகத்தின் கீழ் காலியாக உள்ளன.

மேலும் படிக்க : கடலோர காவற்படையில் வேலை வேண்டுமா ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close