அடுத்த 10 மாதங்களில் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான பின்தங்கிய பெண்களுக்கு பயிற்சி அளிக்க, இந்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகமும் (என்.எஸ்.டி.சி) மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கிறது.
இந்தக் கூட்டாண்மையின் மூலம், திறன் மேம்பாட்டுக் கழகமும், மைக்ரோசாப்ட் நிறுவனமும் சேர்ந்து இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பெண்களின் தொழிலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்த உள்ளனர். உடன்பாட்டின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் கல்வியறிவு, வேலைவாய்ப்பு இணைந்த பயிற்சி, சிறு தொழில்முனைவோர் திறன் தகவல் தொடர்பு திறன் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய 70 மணி நேரத்திற்கும் மேலான பாடநெறி உள்ளடக்கம் இலவசமாக வழங்கப்படும் .
இளம் பெண்கள், குறிப்பாக வேலை வாய்ப்பைத் தேடும் முதல் தலைமுறை பெண்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்றால் வேலை வாய்ப்பை இழந்த பெண்கள் பணியிடங்களில் சேர பயிற்சி பெறுவார்கள். இந்த நேரடி பயிற்சி அமர்வுகள் மைக்ரோசாப்ட் சமூக பயிற்சி (Microsoft community training) தளம் மூலம் ஆன்லைனில் வழங்கப்படும்.
இந்த உடன்பாட்டின் கீழ், தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகம் தனது இ-
என்.எஸ்.டி.சியின் டிஜிட்டல் திறன் முன்முயற்சியான ஈஸ்கில் இந்தியா, அதன் திறன் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் துறை திறன் கவுன்சில்கள், பயிற்சி பங்காளிகள் மற்றும் பயிற்சி மையங்களை உள்ளடக்கிய இந்த ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கும்.
பயிற்சி வகுப்பை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், பெண் தொழிலாளர்கள் பங்களிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சுமார் 20,000 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முறையான பயிற்சிக்குப் பின் ஐ.டி / ஐ.டி-தொடர்புடைய நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.