ஜேஇஇ முதன்மை தேர்வு தொடர்பான போலி வலைத்தளங்களை மாணவர்கள் தவிர்க்கு வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பான முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், " ஜேஇஇ தேர்வு தொடர்பாக பல்வேறு போலி வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகையை வலைத்தளங்களில் விண்ணப்பங்களை பதிவேற்றது, விண்ணப்ப கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்டவைகளை மாணவர்கள் முற்றிலும் புறம்தள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.
மேலும், “ 2021 கல்வியாண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப போர்டல் என்ற பெயரில் jeeguide.co.in போன்ற பல்வேறு மோசடி வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. (info@jeeguide.co.in) என்ற மின்னஞ்சல் முகவரியும், 9311245307 என்ற தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய தகவல்கள் முற்றிலும் போலியானது.
தேசிய தேர்வு முகமையும் அதன் அதிகாரிகளும் இத்தகைய மோசடி வலைத்தளங்களோடு எந்த வகையிலும் தொடர்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுதொடர்பான புகார்களை டெல்லி சைபர் க்ரைம் காவல்துறையிடம் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. grievance@nta.ac.in. என்ற மின்னஞ்சல் மூலம் தேசிய தேர்வு முகமையிடம் புகார் அளிக்கலாம்.
விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் jeemain.nta.nic.in மற்றும் www.nta.ac.in இணையதளத்திற்கு வருகை தந்து சமீபத்திய தகவல்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும் தெளிவான விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள், பின்வரும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் 8287471852, 8178359845, 9650173668, 9599676953 மற்றும் 8882356803 மின்னஞ்சல் தொடர்புக்கு jeemain@nta.ac.in" என்று தெரிவித்தது.
ஜேஇஇ தேர்வு:
பிப்ரவரி 23 முதல் 26 வரை நாடு முழுவதும் ஜேஇஇ மெயின் முதல்கட்ட தேர்வு நடைபெறவுள்ளது. பொதுவாக, ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் ஜேஇஇ (மெயின்) தேர்வு, வரும் கல்வியாண்டில் இருந்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய நான்கு கட்டங்களில் நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் தேர்வில், தேர்வர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று அல்லது நான்கு மாதங்களிலும் தேர்வை எழுதலாம்.
தேசிய தேர்வு முகமை (National Testing Agency) (NTA) இந்திய அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது இதன் முதன்மைப் பணியாகும்.