Joint Entrance Examination JEE (Main), February - 2021: பிப்ரவரி மாத ஒருங்கிணைந்த பொறியியல் நுழைவுத் தேர்வின் உத்தேச விடையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேர்வர்கள் உத்தேச விடையை பெற்றுக் கொள்ளலாம்.
கொள்குரிவகைத் தேர்விற்கான உத்தேச விடைகள் தொடர்பாக முறையீடு செய்ய வேண்டுமானால் மாணவர்கள் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் திருப்பிச் செலுத்தப் படமாட்டாது.
கடந்த பிப்ரவரி மாதம் 23 முதல் 26 வரை ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது உத்தேச விடைக் குறிப்பை தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.
jee Main 2021 Answer key: டவுன்லோட் செய்வது எப்படி?
nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
முகப்புப்பக்கத்தில், ‘Answer Key Challenge ’ என்பதை கிளிக் செய்க.
answer key-ஐ பார்க்கலாம்.
எதிர்கால தேவைக்காக ஒப்புதல் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேர்வர்கள் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதில்களை தற்போது வெளியிட்டுள்ள உத்தேச விடை பட்டியலுடன் சரிபார்த்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்கள் ரெஸ்பான்ஸ் சீட் மூலம் விடைகளை ஒப்பிட்டு மதிப்பெண்ணை கணக்கிட்டு கொள்ளலாம். இதில் ஏதேனும் தவறு இருப்பின், மாணவர்கள் ஓவ்வொரு ஆட்சேபனைக்கும் ரூ.200 செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் (மார்ச் - 3ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“