தேசிய தேர்வு முகமை (NTA) தேர்வு அட்டவணை 2024: தேசிய தேர்வு முகமை இளங்கலைப் படிப்புகளுக்கான (CUET-UG) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மே 15 முதல் மே 31, 2024 வரை நடத்த திட்டமிட்டுள்ளது.
"2024-25 ஆம் கல்வியாண்டில், இளங்கலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET-UG) தேசிய தேர்வு முகமையால் மே 15 முதல் 31 மே 2024 வரை நடத்தப்படும். கடைசித் தேர்வு முடிந்த மூன்று வாரங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்," என்று UGC தலைவர் எம் ஜெகதேஷ் குமார் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: NTA Exam Calendar 2024 Released: CUET UG, NEET in May; JEE Main session 1 in January
கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மைத் தேர்வு 2024 இல் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும். JEE Main 2024 இன் முதல் அமர்வு ஜனவரியில் (ஜனவரி 24 மற்றும் பிப்ரவரி 1 க்கு இடையில்) நடத்தப்படும் அதே வேளையில், இரண்டாவது அமர்வு ஏப்ரல் மாதம் (ஏப்ரல் 1 மற்றும் 15க்கு இடையில்) நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2024 மே 5 அன்று பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்படும். NEET UG 2024 தேர்வுக்கான, முடிவுகள் ஜூன் 2024 இன் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று NTA அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், முதுகலை படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET PG) தேசிய தேர்வு முகமையால் மார்ச் 11 முதல் மார்ச் 28, 2024 வரை நடத்தப்படும். இவற்றுக்கான முடிவுகள் கடைசித் தேர்வு முடிந்த மூன்று வாரங்களுக்குள் அறிவிக்கப்படும்.
CUET UG, JEE Main, NEET UG தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இளங்கலை நுழைவுத் தேர்வுகளுக்கான பதிவு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2023 ஆம் ஆண்டில், JEE முதன்மை அமர்வு 1 தேர்வு ஜனவரி 24 மற்றும் ஜனவரி 31 க்கு இடையில் நடைபெற்றது, NEET UG 2023 மே 7 அன்று நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு போக்குகளின்படி, NEET UG 2024 மே 5 ஆம் தேதி நடைபெறும். 2023 இல் CUET UG மே 21 மற்றும் ஜூன் 23 முதல் கட்டங்களாக நடைபெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“