இக்னோ பல்கலைகழகத்தில் எம்பிஏ, பி.எட் படிக்க விருப்பமா? இந்த செய்தி உங்களுக்குத்தான்....
nta ignou mba, bed admission test 2020 : இக்னோ பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் பி.எட். படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இக்னோ பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் பி.எட். படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைகழகம் (Indira Gandhi National Open University (IGNOU)) இந்தியாவின் முன்னணி மற்றும் புகழ்பெற்ற பல்கலைகழகம் ஆகும். இந்த பல்கலைகழகத்தில் எம்பிஏ மற்றும் பி.எட் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுத்தேர்வு, National Testing Agency (NTA) அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள், nta.ac.in மற்றும் ntaignou.nic.in இணையதளங்களில் ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத்தேர்வு, 2020 ஏப்ரல் 29ம் தேதி நடத்தப்பட உள்ளது.
தேர்வு முடிவுகள், 2020 மே 10ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத்தேர்வு, முன்னதாக இக்னோ பல்கலைகழகத்தாலேயே நடத்தப்பட்டு வந்தது. 2019ம் ஆண்டு முதலே, இந்த தேர்வை, NTA நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
NTA IGNOU MBA, BEd admission test 2020: தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது