தேசிய தேர்வு முகமை, தேசிய திறனறிதல் தேர்வை (NAT-2021) நடத்துவதாக அறிவித்துள்ளது, இது கல்வி நிறுவனங்களுக்கு வெளியே மாணவர்கள் அறிவையும் திறன்களையும் பெற உதவும் ஒரு திட்டமாகும். விண்ணப்ப பதிவு செயல்முறை அக்டோபர் 11 அன்று தொடங்கியுள்ளது மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 18 ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://nat.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் இல்லை. 13 முதல் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வயதுக் குழுக்களுக்கு ஏற்ப தேர்வு நடத்தப்படும்.
13-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் நிலை - 1 மற்றும் 16-18 வயதுக்குட்பட்டவர்கள் நிலை - 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இரு நிலைகளுக்கான தேர்வு அக்டோபர் 23 அன்று நடக்கும்.
19-21 வயதுக்குட்பட்டவர்கள் நிலை - 3 மற்றும் 22-25 வயதுக்குட்பட்டவர்கள் நிலை – 4 என வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான தேர்வு அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இரண்டு ஸ்லாட்களாக தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் நேரத்தை, அந்த ஸ்லாட்டில் காலியிடங்கள் இருப்பின் தேர்வு செய்துக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil