தேசிய திறனறிதல் தேர்வு 2021; விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்?

NTA invites application for National Aptitude Test 2021; check who all can apply: தேசிய திறனறிதல் தேர்வு 2021; தேர்வு தேதி அறிவிப்பு; விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தேசிய தேர்வு முகமை, தேசிய திறனறிதல் தேர்வை (NAT-2021) நடத்துவதாக அறிவித்துள்ளது, இது கல்வி நிறுவனங்களுக்கு வெளியே மாணவர்கள் அறிவையும் திறன்களையும் பெற உதவும் ஒரு திட்டமாகும். விண்ணப்ப பதிவு செயல்முறை அக்டோபர் 11 அன்று தொடங்கியுள்ளது மற்றும் விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 18 ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://nat.nta.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பதிவு கட்டணம் இல்லை. 13 முதல் 25 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வயதுக் குழுக்களுக்கு ஏற்ப தேர்வு நடத்தப்படும்.

13-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் நிலை – 1 மற்றும் 16-18 வயதுக்குட்பட்டவர்கள் நிலை – 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இரு நிலைகளுக்கான தேர்வு அக்டோபர் 23 அன்று நடக்கும்.

19-21 வயதுக்குட்பட்டவர்கள் நிலை – 3 மற்றும் 22-25 வயதுக்குட்பட்டவர்கள் நிலை – 4 என வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான தேர்வு அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மற்றும் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இரண்டு ஸ்லாட்களாக தேர்வு நடத்தப்படும். தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுத விரும்பும் நேரத்தை, அந்த ஸ்லாட்டில் காலியிடங்கள் இருப்பின் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nta invites application for national aptitude test 2021 13 25 year olds eligible to apply nat nta ac in

Next Story
NEET Results 2021: நீட் தேர்வு முக்கிய அப்டேட்… ஆன்சர் கீ இந்த தேதியில் எதிர்பார்ப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com