/indian-express-tamil/media/media_files/2025/10/19/jee-main-2025-nta-2025-10-19-19-24-56.jpg)
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ), பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026-இன் முதல் மற்றும் இரண்டாம் அமர்வுக்கான தேதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ), பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026-இன் முதல் மற்றும் இரண்டாம் அமர்வுக்கான தேதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஜே.இ.இ.(முதன்மைத் தேர்வு 2026 இரண்டு அமர்வுகளாக நடத்தப்படும்.
ஜே.இ.இ 2026 தேர்வு தேதிகள்: உத்தேசமாக) முதல் அமர்வு, அக்டோபர் 2025 முதல் ஜனவரி 21 முதல் 30, 2026 வரை, இரண்டாம் அமர்வு ஜனவரி 2026 கடைசி வாரம் முதல் ஏப்ரல் 1 முதல் 10, 2026 வரைமுதல் அமர்வுக்கான விண்ணப்பப் பதிவு அக்டோபர் 2025 முதல் jeemain.nta.ac.in என்ற அதிகாரப்பூர்வ என்.டி.ஏ இணையதளங்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவில் முக்கிய மாற்றங்கள்
ஆதார் மூலம் விவரங்கள்: பதிவு செயல்முறையை எளிதாக்க, விண்ணப்பதாரரின் முக்கிய விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி போன்றவற்றை தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) ஆதார் தரவுத்தளத்திலிருந்து NTA தானாகவே பெற்றுக்கொள்ளும். இது பிழைகளைக் குறைத்து, சரிபார்ப்பைச் சீராக்க உதவும்.
பிழைகள் திருத்தம்: ஆதார் விவரங்களுக்கும் 10-ஆம் வகுப்புச் சான்றிதழில் உள்ள விவரங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பின், விண்ணப்பச் செயல்பாட்டின்போது அவற்றைச் சரிசெய்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
தேர்வு மைய விரிவாக்கம்: மேலும் பல விண்ணப்பதாரர்களுக்கு வசதியாக, ஜே.இ.இ முதன்மைத் தேர்வு மையங்கள் உள்ள நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் என்.டி.ஏ அறிவித்துள்ளது.
JEE (முதன்மை) 2026 தேர்வு குறித்து ஏதேனும் கேள்விகள் அல்லது உதவி தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் nta.ac.in மற்றும் jeemain.nta.nic.in இணையதளங்களை அணுகலாம் அல்லது என்.டி.ஏ உதவி மையத்தை 91-11-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
2025-இல், JEE முதன்மைத் தேர்வு ஜனவரி 22 முதல் 30 வரையிலும், ஏப்ரல் 2 முதல் 8 வரையிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us