நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், நீட் பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்ப படிவங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து என்டிஏ உத்தரவிட்டுள்ளது.
என்டிஏ வெளியிட்ட தற்போதைய அறிவிப்பின்படி, விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள மெயில் ஐடிக்கு தான் விண்ணப்பதாரரின் OMR responce sheet மற்றும் தேர்வு முடிவு(scorecard) ஆகியவை அனுப்பப்படும். எனவே, மீண்டும் ஒருமுறை மெயில் ஐடி சரியானதா என்பதை பார்த்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவம் திருத்தம் காலக்கெடு நீட்டிப்பு
பேஸ் 1 மற்றும் பேஸ் 2 விண்ணப்பப் படிவத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதி அக்டோபர் 14 ஆம் தேதி இரவு 11.50 வரை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் தற்போது கிடைத்த இறுதி வாய்ப்பில் பாலினம், குடியுரிமை. மெயில் ஐடி, பிரிவு, உட்பிரிவு, கல்வித்தகுதி ஆகிய விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீட் ஆன்சர் கீ
நீட் ஆன்சர் கீ வெளியாகும் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரவில்லை. இருப்பினும், விண்ணப்பப் படிவம் திருத்தும் தேதி முடிவடைந்ததும், ஆன்சர் கீ வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நீட் ஆன்சர் கீ வரும் அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்சர் கீ வெளியாகி 36 முதல் 48 மணி நேரத்திற்குள் மாணவர்கள் விடை குறித்த சந்தேகங்களை ஆன்லைனில் பணம் செலுத்தி எழுப்பலாம். அதன்பின்னர், பைனல் ஆன்சர் கீ வெளியிடப்படும். அதன் அடிப்படையில் தான், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil