நீட் 2020 : சமர்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் பிழைகளை சரி செய்வது எப்படி?
NEET UG Form Correction Tips : ஜிப்மெர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கும் நீட் அவசியம் என்பதால் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.
NEET UG 2020 Exam : ஜனவரி 6ம் தேதியோடு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவுற்றது. நீட் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை திருத்திக் கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளது தேசிய தேர்வு முகமை. ntaneet.nic.in என்ற இணையத்திற்கு சென்று தவறுகள் ஏதேனும் இருந்தால் ஜனவரி 31ம் தேதிக்குள் திருத்திக் கொள்ள இயலும்.
Advertisment
ஜிப்மெர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கும் நீட் அவசியம் என்பதால் இந்த முறை தேர்வர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தேர்வு எழுத 15,93,452 தேர்வர்கள் விண்ணிப்பித்துள்ளனர். பிறந்த தேதி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே பிழைகளை திருத்த வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
NEET UG 2020: How to make corrections
nta.ac.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்
ஹோம் பேஜ்ஜில் காட்டும் நீட் - யூ.ஜி. என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
புதிய விண்டோ ஓப்பன் ஆகும். அதில் லாக்-இன் லிங்கினை க்ளிக் செய்யவும்.
உங்களின் யூசர் ஐ.டி, மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாக்-இன் செய்யவும்.
எங்கே பிழையாக உள்ளீடு கொடுத்தீர்களோ அங்கே மாற்றங்களை ஏற்படுத்தி preview and submit என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்களின் பதிவு செய்யப்பட்ட போன் நம்பருக்கு செல்லும். அதனை உள்ளீடாக கொடுத்தால் உங்கள் விண்ணப்பங்கள் சரி செய்து கொள்ளப்படும்.
நீட் தேர்வு மே மாதம் பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. மார்ச் 27, 2020 அன்று இந்த தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் கிடைக்கும். தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும். 180 கேள்விகளுக்கு நடைபெறும் இந்த தேர்வில் 90 கேள்விகள் உயிரியலில் இருந்தும், தலா 45 கேள்விகள் வேதியியல் மற்றும் இயற்பியலில் இருந்தும் கேட்கப்படும்.