NEET UG 2023 ரிசல்ட் தேதி: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023க்கான மதிப்பெண் அட்டைகளை ஜூன் இரண்டாவது வாரத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் என இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு தெரிய வந்துள்ளது. வெளியிடப்பட்டதும், நீட் தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் - https://neet.nta.nic.in/
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை நாடாளுமன்றக் குழுவுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. இந்த உத்தரவாதத்தை தேசிய தேர்வு முகமை சமீபத்தில் குழுவிடம் வழங்கியது.
இதையும் படியுங்கள்: NEET Results Date 2023: நீட் ரிசல்ட் எப்போது? ஆட்சேபனை டெட்லைன் முடிந்து 5 நாளில் வெளியாக வாய்ப்பு
இன்று, மணிப்பூரில் இருந்து சுமார் 8,700 விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் வன்முறை காரணமாக மே 7 அன்று இம்பாலில் தேர்வெழுத முடியாமல் போனவர்களுக்கு இன்று தேர்வு நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை அந்த மாணவர்களுக்கு 10 நகரங்களில் இருந்து தேர்வெழுத வாய்ப்பளித்துள்ளது.
நாட்டின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, மருத்துவ நுழைவுத் தேர்வு மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது, அதில் 97.7 சதவீத வருகைப் பதிவானது.
இதற்கிடையில், நாட்டின் பிற பகுதிகளில் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுக்கான OMR பதில் தாள்கள் மற்றும் தற்காலிக விடைத்தாள்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்புக்கு எதிராக சவால்களை எழுப்ப இன்று (ஜூன் 6) இரவு 11:50 மணி வரை மாணவர்களுக்கு அவகாசம் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil