இளங்கலை நீட் தேர்வு உடன் APAAR ஐ.டியை ஒருங்கிணைப்பதாக மத்திய அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் APAAR ஐ.டி மற்றும் ஆதார் இரண்டையும் விண்ணப்பத்தில் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயல்முறைக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளங்கலை) NEET (UG)-2025 பதிவு செயல்முறைக்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, இது APAAR ஐடியை (தானியங்கி நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு) தேர்வோடு ஒருங்கிணைப்பதை வலியுறுத்துகிறது.
விண்ணப்பம் மற்றும் தேர்வு நிலைகள் முழுவதும் APAAR ஐ.டி மற்றும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் இரண்டையும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி.
APAAR ஐடியை ஆதாருடன் ஒருங்கிணைப்பது, தேர்வர்களுக்கு மிகவும் திறமையான, வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தேர்வு செயல்முறையை வழங்குகிறது. இது சரிபார்ப்பு நிலைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், தேர்வு நடைமுறை சுழற்சியின் நம்பகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்துகிறது.
ஆதாரை முதன்மை அடையாளங்காட்டியாகப் பயன்படுத்துவதன் மூலம், தேர்வாளர்கள் சரியாக அங்கீகரிக்கப்படுவதைத் தேர்வு அதிகாரிகள் உறுதிசெய்து, பிழைகள் மற்றும் மோசடிகளைக் கணிசமாகக் குறைக்கலாம்.
மேலும் இதுகுறித்த தகவல்களுக்கு மாணவர்கள் என்.டி.ஏ உதவி மையத்தின் 011-40759000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது பதிவு செயல்முறை மற்றும் ஆதார் ஒருங்கிணைப்பு தொடர்பான உதவிக்கு neetug2025@nta.ac.in என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.