NTA release JEE Main 2022 results check category wise cut off: தேசிய தேர்வு முகமை (NTA) இன்று JEE (Main 2022) முதன்மைத் தேர்வுக்கான இறுதி முடிவுகளை அறிவித்தது. விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை https://jeemain.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்.
இந்த ஜே.இ.இ முதன்மை தேர்வுகளில் ஒட்டுமொத்த தகுதிப் பட்டியலில் (அமர்வு 1 மற்றும் அமர்வு 2 செயல்திறன் அடிப்படையில்) 24 பேர் 100 சதவிகிதம் பெற்றுள்ளனர். இந்த 24 பேரில், இரண்டு பெண்கள் மட்டுமே 100 சதவீதத்தைப் பெற்றுள்ளனர். ஆந்திராவின் பாலி ஜலஜாக்ஷி மற்றும் அஸ்ஸாமின் சினேகா பரீக் ஆகியோர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்: பொறியியல் கவுன்சலிங்; ஒவ்வொரு ரவுண்ட்க்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்?
இந்த ஆண்டு மொத்தம் 6,48,555 ஆண்களும், 2,57,031 பெண்களும் JEE அமர்வுகளில் கலந்து கொண்டனர். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக ஐந்து தேர்வர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு, இரண்டு அமர்வுகளுக்கும் மொத்தம் 10,26,799 தனித்தேர்வர்கள் பதிவு செய்தனர் அவர்களில் 9,05,590 தனித்தேர்வர்கள் இரண்டு அமர்வுகளிலும் தேர்வு எழுதினர். அமர்வு 1 தேர்வு ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை நடத்தப்பட்டது, அமர்வு 2 தேர்வு ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வு இந்தியாவிற்கு வெளியே உள்ள 17 நகரங்கள் உட்பட 440 நகரங்களில் 622 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது.
NTA ஞாயிற்றுக்கிழமை JEE முதன்மை அமர்வு 2 இன் இறுதி விடைக்குறிப்புகளை வெளியிட்டது. JEE Main 2022 இன் அமர்வு 2 க்கான தற்காலிக விடைக்குறிப்பில், NTA ஆறு கேள்விகளை கைவிட்டது மேலும் ஐந்து கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான பதில்கள் உள்ளன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இது தவிர, ஐந்து கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் இருந்ததாகவும் NTA அறிவித்துள்ளது. எனவே, அமர்வு 2 மதிப்பெண் அதற்கேற்ப மாறுபடலாம்.
ஜே.இ.இ தேர்வு முடிவுகளின் அறிவிப்புடன், தேர்வு அதிகாரிகள் தகுதிபெறும் JEE முதன்மை கட்-ஆஃப் 2022 ஐயும் வெளியிட்டுள்ளனர், இது தேர்வில் தகுதி பெற தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆகும்.
JEE முதன்மை தேர்வு 2022 தகுதி கட்-ஆஃப்
பொது பிரிவு - 88.4121383
EWS பிரிவு - 63.1114141
OBC NCL (பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) - 67.0090297
ஆதிதிராவிடர் (SC) - 43.0820954
பழங்குடியினர் (ST) - 26.7771328
பொதுப்பிரிவு மாற்றுதிறனாளிகள் - 0.0031029
அதிகாரிகள் அனைத்து பிரிவுகளுக்கும் தனித்தனியாக JEE முதன்மை தேர்வு 2022க்கான கட் ஆஃப் வெளியிட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையின்படி JEE முதன்மை கட்-ஆஃப் தகுதி பெற வேண்டும்.
EWSக்கான JEE முதன்மை கட்-ஆஃப் 63.1114141 ஆகும், இது முந்தைய ஆண்டு கட்-ஆஃப் விட மிகவும் குறைவு. பொதுப் பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண்கள் 88.4121383, இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
இப்போது, JEE முதன்மைத் தேர்வில் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முதல் 2.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 28 அன்று IIT பாம்பே நடத்தும் JEE அட்வான்ஸ்டு 2022 தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
என்.ஐ.டி, ஐ.ஐ.டி மற்றும் ஜி.எஃப்.டி.ஐ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் ஜே.இ.இ மெயின் தேர்வை நடத்துகிறது. பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு, விண்ணப்பதாரர்கள் JEE முதன்மை கட் ஆஃப் தகுதி பெற வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.