ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை (ஜேஇஇ ) பல மாநில மொழிகளில் நடத்த மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்த பிராந்திய மொழிகளுக்கு முன்னிரிமைக் கொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு செயலாளர் ஆர்.சுப்ரமண்யம் தெரிவிக்கையில்,"ஜேஇஇ முதன்மைத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு என்பதால் எல்லா மாநில மொழிகளையும் ஒரே நேரத்தில் தேர்வுக்குள் கொண்டு வருவது கடினம், சில தொழில்நுட்ப வரம்புகளும் இங்கே உள்ளன. இந்த தேர்வை பன்மொழிகளில் நடத்தவது எங்களது கடமையாக நினைக்கின்றோம், இருந்தாலும் காலம் தேவைப்படுகிறது. இதற்குத் தேவையான பிராந்திய மொழி மென்பொருளை உருவாக்க தேசிய தேர்வு முகமைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
எண்ணிக்கை விதத்தில் பார்த்ததால், முதற்கட்டமாக மராத்தியம், தெலுங்கு ஆகிய மொழிகள் சேர்க்கப்படலாம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஜேஇஇ முதன்மைத் தேர்வில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மட்டும் 1.1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆந்திரா,தெலுங்கானா சேர்த்து 1.60 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, வங்காள மொழியிலும் இந்த தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று சில நாட்களாகவே அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், எண்ணிகையின் அடிப்படையில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து 20,000 க்கும் குறைவான விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படுகின்றன.
2020-ல் நடைபெறும் ஜே.இ.இ முதன்மைத் தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடக்கவிருக்கிறது. இருந்தாலும் குஜராத், தமன் & டியு, தாத்ரா, நகர் ஹவேலி ஆகிய மையங்களில் நடைபெறும் தேர்வில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் கேள்விகளில் இருக்கும்.
குஜராத்திய மொழியை சேர்த்ததற்கான காரணத்தை பற்றி முகமை விளக்கும் போது," குஜராத் மாநிலத்தின் இடைவிடாது கோரிக்கையின் பெயரில்,இந்த முயற்சி மேற்கொண்டதாகவும், மற்ற மாநிலங்கள் இது போன்ற கோரிக்கையுடன் தங்களை அணுகவில்லை" என்று தெரிவத்துள்ளது.