மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிய ஆசையா ?

இரண்டு வருடம் முதுகலைப் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். மெயின் ஸ்ட்ரீம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NVS Recruitment 2019 Notification for 251 posts : இந்தியா முழுவதும் சுமார் 635 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்திய மனித வளத்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பள்ளிகள் கிராமப்புற மாணவர்களுக்காக தொடங்கப்பட்டது. தற்போது அந்த பள்ளிகளில் சுமார் 251 வகுப்பாசிரியர் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது.

இப்பள்ளிகளில் வேலை செய்ய விருப்பம் கொண்டிருப்பவர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப இறுதி நாள் பிப்ரவரி 14ம் தேதி ஆகும். navodaya.gov.in. என்ற இணையத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.  அட்மிட் கார்டினை மார்ச் 10ம் தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வு நாள் மார்ச் இறுதி வாரத்தில் அமையும்.

மேலும் படிக்க : ஆண்டு சம்பளம் 15 லட்சம்… எஸ்.பி.ஐ  வங்கியில் வேலை

காலியாக இருக்கும் பணியிடங்கள் – NVS Recruitment 2019 Notification for 251 posts

ப்ரின்சிபல் – 25
அசிஸ்டண்ட் கமிஷ்னர் (நிர்வாகம்) – 3
அசிஸ்டண்ட் – 2
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் – 3
போஸ்ட் கிராஜூவேட் டீச்சர்கள் – 218 பணியிடங்கள்

கல்வித் தகுதி

பிரிசின்பல்

அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். பி.எட் அல்லது அதற்கு இணையான கல்வி கற்றிருக்க வேண்டும்.

அசிஸ்டண்ட் கமிஷ்னர் (நிர்வாகம்) – டிகிரி முடித்திருக்க வேண்டும்

அசிஸ்டண்ட் / கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்

டிகிரி முடித்திருக்க வேண்டும். வேர்ட் ப்ரோசசிங் மற்றும் டேட்டா எண்ட்ரியுடன் கூடிய ஒரு வருட பட்டயப் படிப்பினை முடித்திருக்க வேண்டும்

போஸ்ட் கிராஜூவேட் டீச்சர்கள்

இரண்டு வருடம் முதுகலைப் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும். மெயின் ஸ்ட்ரீம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Education-jobs news in Tamil.

×Close
×Close