மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை, நாளை ( ஜூன் 7ம் தேதி) முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை, நாளை ( ஜூன் 7ம் தேதி) முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 350 மருத்துவ படிப்புக்கான இடங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டுள்ளன. 508 எம்.டி., எம்.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன..வேறெந்த மாநிலத்திலும் ஓராண்டில் இந்த அளவிற்கு இடங்கள் அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை http://www.tnhealth.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை,
The Secretary,
Selection Committee,
162, E.V.R. Periyar Salai,
Kilpauk, Chennai – 600 010 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஒதுக்கீடு

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (BC) 30 சதவீதம்
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 20 சதவீதம்
SC பிரிவினருக்கு 18 சதவீதம்
ST பிரிவினருக்கு 1 சதவீதம்
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடங்கள், மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்

அரசு மருத்துவ கல்லூரி மொத்த இடங்கள் மாநில இடங்கள்

மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் 250 213
ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் 250 212
மதுரை மருத்துவ கல்லூரி 150 128
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி 150 127
கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி 150 128
செங்கல்பட்டு ஙமருத்துவ கல்லூரி 100 85
நெல்லை மருத்துவ கல்லூரி 150 128
கோவை மருத்துவ கல்லூரி 150 127
சேலம் மோகன் குமாரமங்கலம் கல்லூரி 100 85
திருச்சி மருத்துவ கல்லூரி 150 128
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி 150 128
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி 100 85
வேலூர் அரசு மருத்துவ கல்லூரி 100 85
தேனி அரசு மருத்துவ கல்லூரி 100 85
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி 100 85
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி 100 85
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி 100 85
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி 100 85
சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி 100 85

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Online application for medical courses download from tomorrow

Next Story
NEET Result 2019: நீட் மாணவர்களுக்கு செல்போனில் ரிசல்ட் தேவை- வழிகாட்டும் தமிழ்நாடுntaneet. nic. in, நீட் தேர்வு முடிவுகள், nta neet.nic
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express