பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடர்பான அறிவிப்பு 2 தினங்களில் வெளியாகும் என திங்கள்கிழமை (மே1) உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வருகிற 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. முன்னதாக, உயர்கல்வி சேர்க்கைக்கான பணிகளும் வேகம் எடுத்து இருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 402 பொறியியல் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. பொறியியல் படிப்பில் அதிக அளவில் மாணவர்கள் சேர்வதால் இது குறித்த எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்தாண்டு ஒன்றரை லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டும் இதே அளவில் மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணபிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே4ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“