Advertisment

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு… அட்டவணை வெளியீடு

அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
GATE Exam என்பது என்ன? தேர்வு முறை எப்படி?

தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை கடந்த வாரம் அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் இன்று, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பி.இ.,பி.டெக்.,பி.ஆர்க்., ஆகிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அட்டவணையில் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வு அட்டவணை குறித்து விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்து 879 மாணவ-மாணவிகள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வை எழுத உள்ளனர்.

இதற்கிடையில், அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகலுக்கான அரியர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கொரொனோ பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ஆன்லைன் முறையில் தொடங்குகின்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Semester Online Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment