இந்திய வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளியான நாகாலாந்து மாநிலத்தின் வோகா மாவட்டத்தைச் சேர்ந்த ந்சும்துங் பாட்டன், நீட் தேர்வு கட்டாயம் என்ற தகவலை கேட்டவுடன் தனது மருத்துவக் கனவை கிட்டத்தட்ட கைவிட்டார்.
ஒரு விவசாய குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த ந்சும்துங் பாட்டனுக்கு ஏழு உடன்பிறப்புகள். நீட் பயிற்சிக்காக ஒரு பெருநகருக்கு தன்னை பயிற்சி மையத்துக்கு அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மௌனமாய் புரிந்துணர்ந்த அந்த 19 வயது இளைஞன் மாற்று சிந்தனைக்கு தயாரானான்.
ந்சும்துங் பாட்டன் கதை வெற்றி பெற்றவன் கதையல்லை. உண்மையில், பாட்டன் இன்றுவரை நீட்தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கிறான். ஆனால், தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் தனது நீட் தேடல்களை தீர்த்துக் கொள்கிறான்.
NEETprep, BYJU’s, ICA Edu Skills Youth4works போன்ற பல முக்கிய தளங்கள் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்தும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
NEETprep வலைதளத்தில் சேர்ந்த ந்சும்துங் பாட்டனுக்கு அனைத்து ஆய்வுப் பொருட்களும் வழங்கப்பட்டது. மின்னஞ்சல் வழியாக பாடநெறி தகவல்கள் உடனுக்குடன் கிடைக்கின்றது. பெரிய நகரத்தில் உள்ள சாதாரண பயிற்சி மையத்தில் சேருவதை விட மிகக் குறைந்த விலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வருவதாக பாட்டன் உணருகிறார்.
ஆன்லைன் கல்வியாளர்கள், மருத்துவ நுழைவுக்கான ஆன்லைன் வீடியோ திட்டங்கள் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் வாழ்கையை மாற்றியமைக்கும் சக்தியுடையது என்கின்றனர். வழக்கமான பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் நுழைய முடியாத சூழ்நிலையில், ஆன்லைன் நீட் தேர்வு பயற்சி திட்டம் தவிர்க்கமுடியாது.
2016 ஆம் ஆண்டில் NEETprep இணையதளத்தை துவங்கிய கபில் குப்தா இது குறித்து கூறுகையில், ஒரு பிரபலமான பயிற்சி நிறுவனத்தில் ஒரு வருட நீட் தேர்வு பயிற்சிக்கு சுமார் 1-1.5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். மேலும், அந்த மாணவர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றால், தங்குமிடம்/உணவு போன்ற செலவுகளும் பின்தொடரும். ஆனால், Neetprep வீடியோ வகுப்புகளுக்கு செலவாகும் தொகை ஆண்டுக்கு ரூ .25,000 மட்டுமே என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற நீட் தேர்வுக்கு விண்ணப்பிகின்றனர். இதில் 8 லட்சம் பேர் டயர் II, டயர் III நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
BYJU இன் தலைமை இயக்க அதிகாரி மிருனல் மோஹித் இது குறித்து கூறுகையில், “கல்வியில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது கற்றலை மிகவும் தன்னிலைப்படுத்தப்படுகிறது என்றார். மேலும், டிஜிட்டல் கல்வி மூலம், மாணவர்கள் தங்கள் பாணியில் கற்றுக் கொள்ளலாம், மற்ற மாணவர்களின் வேகத்தோடு ஒப்பிட வேண்டியதில்லை, தங்களின் கருத்தியல் புரிதலை வலுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தலாம் என்றும் தெரிவித்தார்.
மணிப்பூரைச் சேர்ந்த ராணா அகோஜாம் 2018 ஆம் ஆண்டு நீட் தேர்வு பயிற்சி பெற டெல்லியை நாடினார் . ஆனால் நிதி நெருக்கடி காரணமாக விரைவில் திரும்ப வேண்டியிருந்தது. 2019 ஆம் ஆண்டில் ஆன்லைன் நுழைவு தயாரிப்பு வகுப்புகளில் சேர்ந்த அவர் வெற்றிகரமாக எம்.பி.பி.எஸ் ஆனார்.
தனது வெற்றியைப் பகிர்ந்த அவர்“ஆன்லைன் வகுப்புகளின் உதவியுடன், நான் நாட்டின் உயர்மட்ட ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப் பட்டேன். பயிற்சி வகுப்புகளுக்கு பயணிப்பதில் எனது நேரத்தை வீணாக்காமல், படிப்பில் கவனம் செலுத்துவதில் அதிக நேரம் செலவிட்டேன்,”என்று தெரிவித்தார் ராணா அகோஜாம்.
Youth4works தலைமை நிர்வாக அதிகாரியும், நிறுவனருமான ரச்சித் ஜெயின் கூறுகையில்,“ஆன்லைன் வகுப்புகள் வழக்கமான வகுப்புகளை விட குறைந்த விலை கொண்டவை. ஏனெனில் மாணவர்கள் பாடநெறிகளுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பயிற்சி நிறுவனங்கள் செயல்பாட்டு செலவுகளுக்கு வசூலிக்கின்றனர்,”என்றார்.
புதுடெல்லியின் எய்ம்ஸ் முன்னாள் இயக்குநரும், தற்போது ராஜஸ்தான் மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவருமான பேராசிரியர் எம்.சி மிஸ்ரா கூறுகையில்,”மருத்துவக் கல்வி முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது, ஆன்லைன் கல்வி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”என்றார். மேலும், டெலி-வீடியோ கல்வி முறையில் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தும் விதமாக இரு வழி தொடர்பாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தில்லி மருத்துவ கவுன்சில் தலைவர் கிரிஷ் தியாகி தனது கருத்தை ஒப்புக் கொள்கிறார். அவர் கூறுகையில், ஒவ்வொரு மருத்துவ ஆர்வலரும் பயிற்சி மையத்திற்குச் சென்ற காலம் இருந்தது. ஆனால் நேரம் கொண்டு வருகிறது. இணைய வழிக் கல்வி மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் ஆர்வலர்களுக்கு வீடியோ பயிற்சி ஒரு ஆசீர்வாதமாக வந்துள்ளது,”என்றார்.